• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சாம்ஸ் உடற்பயிற்சி மையம் துவக்கம்..,

BySeenu

Aug 26, 2025

கோவை அவினாசி சாலை பீளமேடு பகுதியில், சாம்ஸ் ஜிம் என்ற புதிய உடற்பயிற்சி கூடம் துவக்க விழா நடைபெற்றது..

கோவையில் இரண்டாவது கிளையாக அதி நவீன உடற்பயிற்சி உபகரணங்களுடன் துவங்கப்பட்ட புதிய சாம்ஸ் உடற்பயிற்சி மையத்தை அமரன் திரைப்படத்தில் சிறப்பு வேடத்தில் தோன்றிய பிரபல டெல்டா ஸ்க்வாட் கமாண்டர் ஈசன் திறந்து வைத்தார்..

SAMS GYM ன் உரிமையாளர் மற்றும் நிர்வாக இயக்குநர் சாம்சன் மெக்கினன் தலைமையில் நடைபெற்ற இதில்,உடற்பயிற்சி மையத்தின் இயக்குநர் ஷோபா குத்து விளக்கேற்றி துவக்கினார்.

ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலர் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் வகையில் அதிநவீன உடற்பயிற்சி உபகரணங்களை கொண்டுள்ள சாம்ஸ் ஜிம்மில்,டிரெட்மில், எலிப்டிகல் டிரெயினர், வெயிட் லிஃப்டிங் கருவிகள் போன்ற நவீன உபகரணங்களை பிரத்யேகமாக தயாரித்து வைத்துள்ளனர்.

விழாவில் கலந்து கொண்ட டெல்டா கமாண்டர் ஈசன் கூறுகையில்,தற்போது ஒவ்வொருவரும் உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பது அவசியம் என தெரிவித்தார்.

குறிப்பாக உடற்பயிற்சி என்பது அனைத்து வயதினருக்கும் பொதுவானது என கூறிய அவர்,மருத்துவமனைக்கு செலவு செய்யாமல் இது போன்று உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள செலவு செய்வதில் தயக்கம் காண்பிக்க வேண்டாம் என அறிவுறுத்தினார்.

சுத்தமான, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலுடன் விசலாமாக புதிதாக துவங்கப்பட்டுள்ள சாம்ஸ் ஜிம்மில், ஒவ்வொருவரின் உடல் தகுதி மற்றும் இலக்குகளுக்கு ஏற்ப,அனுபவம் வாய்ந்த உடற்பயிற்சி பயிற்சியாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியான வழிகாட்டுதலையும், பயிற்சியையும் வழங்குவார்கள் என சாம் மெக்கினன் தெரிவித்தார்.