கோவை மாநகரத்தில் கடந்த ஜனவரியில் இருந்து ரோந்து காவலர்கள் மூன்று முறைகளில் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டோம் இந்த நிலையில் தற்பொழுது கூடுதலாக 19 வீட்டுகள் இணைக்கப்பெற்று மொத்தம் 52 பீட் காவலர்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்த பணியமர்த்தப்பட்டுள்ளனர் இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு பிரத்தியேக தொலைபேசி எண்ணும் ஸ்மார்ட்போனும் வழங்கப்பட்டுள்ளது

அவசர நேரங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்கும் பட்சத்தில் மாநில கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும் அங்கிருந்து உடனடியாக அது எந்த பகுதியில் வருகின்றது என்பதை சரி பார்த்த உடனடியாக அந்தப் பகுதியில் இரவு நேரத்தில் அல்லது சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களின் தொலைபேசி எண்ணிற்கு இணைப்பு மாற்றப்படும் அதனை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து அப்பகுதி மக்களுக்கு என்ன தேவையோ அதனை செய்து கொடுப்பார்கள் இதற்காக பிரத்தியாக வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது
மேலும் பொதுமக்கள் அனைவரும் க்யூ ஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்து தங்கள் பகுதியில் உள்ள ரோந்து பீட் பார்க்கும் காவலர்களின் எண்களை அறிந்து வைத்துக் கொள்ளலாம். மேலும் நாங்களும் இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம் இதனால் பொதுமக்கள் உடனடியாக காவலர்களை அணுகலாம் என்றார்
மேலும் கோவை மாநகர பகுதிகளில் வருடத்திற்கு கூடுதலாக ஒரு லட்சம் வாகனங்கள் வருகின்றன இதனால் போக்குவரத்தில் நெரிசல் என்பது அதிகரித்து தான் வருகிறது. இருந்த போதும் எங்களால் முடிந்த அளவிற்கு போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். குறிப்பாக மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி அருகே கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் முடிவு பெற்றால் அந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும். அதேபோல மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் இந்த போக்குவரத்து நெரிசலை சீர் செய்வதற்காக பல்வேறு பணிகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.
விநாயகர் சதுர்த்தியை பொருத்தவரை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது இது சம்பந்தமாக குனியமுத்தூர் இல் ரூட் மார்ச் செய்திருந்தோம் மேலும் தற்பொழுது பிரச்சனைக்குரிய இடங்கள் அதேபோல வழிபாட்டுத்தலங்கள் போன்ற இடங்களில் எவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்த என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றோம். குறிப்பாக கடந்த காலங்களை பொறுத்தவரை விநாயக சதுர்த்தி ஊர்வலங்களுக்கு அதிபரைவு படை மற்றும் பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் போன்ற படைகள் வரும்

அதேபோல இந்த ஆண்டும் அதிவிரைவு படை மற்றும் பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் நான்கு பட்டாலயங்கள் வரவுள்ளது கடந்த ஆண்டு 700 க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் அதே அளவிற்கு அனுமதி அளிக்கப்படும் இருந்த போதும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் மொத்தம் மாநகரை பொறுத்தவரை 1800 காவலர்கள் விநாயகர் சதுர்த்திக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவை மாநகரப் பகுதிகளில் 2000 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த கோவை மாநகராட்சியுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலம் இதனை இணைக்க உள்ளோம். மேலும் பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் சிசிடிவி கேமரா கலையும் ஒருங்கிணைத்து மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் எங்கேயும் கேபிள்கள் துண்டிப்பு அல்லது வேண்டுமென்றே மறுமணம் அவர்கள் துண்டிப்பு போன்ற சம்பவங்கள் ஈடுபட்டால் உடனடியாக அதனை சீர் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில் இதுபோன்று ரோந்து காவலர்களுக்கு செல்போன்கள் கொடுக்கப்படும் பட்சத்தில் கூடுதல் பணி சுமை ஏற்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை சுழற்சி முறையில் தான் பணியாற்றுகின்றனர். மேலும் வயதானவர்களுக்கு விடுமுறையும் கொடுக்கப்பட்டுள்ளது அதேபோல சுழற்சி முறையில் வேலைப்பளு என்பது இருக்காது என்றார்.