மதுரை மாவட்ட செங்குந்தர் மகாஜன பொன்விழா ஆண்டு மதுரை மடிட்சியா அரங்கில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் செல்வராஜ் மாநில பொருளாளர் காந்தி மாநில செயலாளர் திருநாவுக்கரசு மாவட்ட தலைவர் ரவீந்திரன் மாவட்ட பொருளாளர் உதயகுமார் இளைஞர் அணி அமைப்பாளர் சண்முகமணி மாவட்ட துணை தலைவர் காளிமுத்து உட்பட ஏராளமான செங்குந்தர் மகாஜன சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் & திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மேலும் முன்னாள் செங்குந்தர் மகாஜன சங்க நிர்வாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டது,தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி அறிவிக்கப்பட்டது,மேலும் செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது.
தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில்,

மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் மாநில மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து விஜய் அங்கிள் என விமர்சனம் செய்தது தொடர்பாக கேட்ட கேள்விக்கு,
சூரியனைப் பார்த்து நாய் குலைக்கும் அதற்காக சூரியன் நாய் மேல் கோபப்படுவதில்லை, அது நாய் என்று தெரியும் அதை பெருசாக எடுக்கத் தேவையில்லை, உலகத்திற்கே சூரியன் வெளிச்சம் கொடுக்கிறது. அந்த வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை நாய் என்று சந்திரகுமார் கடுமையாக விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.