மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் ஸ்ரீ ருக்மணி ஸ்ரீசத்யபாமா சமேத ஸ்ரீ நவநீத கிருஷ்ண ஸ்வாமி திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவ ஆறாவது நாள் விழாவில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

பக்தர்கள் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் அருகிலிருந்து சீர்வரிசை சுமந்து வந்தனர் தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கின. மாலை மாற்றுதல், பாத பூஜை, நடைபெற்று மாங்கல்ய தாரணம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் கோவிந்தா கோபாலாஎன தாங்கள் மனம் உருகி வேண்டினர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார்.