• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சட்ட உதவி மைய கட்டிடம் கட்ட உதவி ஆட்சியர் ஆய்வு

ByP.Thangapandi

Aug 22, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 17 வது வார்டு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகம் அருகில் சமூக நலத்துறையின் பெண்கள் பாதுகாப்பு மையம் மற்றும் சட்ட உதவி மைய கட்டிடம் அமைக்க வருவாய்த்துறை சார்பில் நிலம் ஒதுக்கீடு செய்து கொடுப்பது குறித்து உசிலம்பட்டி உதவி ஆட்சியர் உட்கர்ஷ் குமார் நேரில் ஆய்வு செய்தார்.

சுமார் 7.5 சென்ட் இடம் சமூக நலத்துறைக்கு இந்த கட்டிடம் கட்ட வழங்க உள்ளனர்., இடத்தில் உள்ள மரங்கள், சாலை வசதிகள் குறைத்து உதவி ஆட்சியர் ஆய்வின் போது கேட்டறிந்தார்.

உசிலம்பட்டி வட்டாச்சியர் பாலகிருஷ்ணன், தலைமை நில அளவர் ஜெயபாண்டியன் மற்றும் வருவாய் அலுவலர்கள் உடனிருந்தனர்.