• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா..,

ByP.Thangapandi

Aug 20, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி ஊராட்சிட்குட்பட்ட நாவார்பட்டி கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரத்து சோனைமுத்தையா விநாயகர் கோவில் புதியதாக கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு முன்னதாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, முதல்கால யாகசாலை பூஜைகள், இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகளுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவானது தொடர்ந்து மங்கள இசை முழங்க கடம் புறப்பாடாகி சோனைமுத்தையா விநாயகர் கோவில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார் புத்தூர் ராம்குமார் தலைமையில் புனிநீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.