மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் மூன்று தலைமுறைக்கும் மேலாக வீரஅபிமன்யூ – சுந்தரி எனும் நாடகத்தை ஒவ்வொரு ஆண்டின் பங்குனி பொங்கல் மற்றும் புரட்டாசி பொங்கல் காலங்களில் கிராம மக்களே நாடக கலைஞர்களாக மாறி நடித்து நாடகத்தை அரங்கேற்றி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இதே போன்று கிருஷ்ண ஜெயந்தி நாளான்றும் தாங்கள் நாடகம் அரங்கேற்றும் மேடையில் அமைந்துள்ள கிருஷ்ணன் திரு உருவபடத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தொன்று தொட்டு நாடக மேடையில் உள்ள கிருஷ்ணன் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

தொடர்ந்த தங்கள் நாடகத்தின் பாடல்களை பாடி சிறப்பு வழிபாடு செய்த நிலையில் இந்நிகழ்வில் கிராமத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்ட மழலைகள் கிருஷ்ணன் – ராதை வேடமணிந்து வந்து கலந்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கிருஷ்ணன் – ராதை வேடமணிந்து வந்த மழலைகள் அனைவருக்கும் விழா குழுவினர் பரிசுகளை வழங்கி பாராட்டி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்தனர்.