• Fri. Oct 3rd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ராட்சத அலையில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம்..,

ByB. Sakthivel

Aug 16, 2025

சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று முதல் 3 நாட்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சசுற்றுலா பயணிகள் படை எடுத்து வருகின்றனர்.

இதனால் கடற்கரை மற்றும் சுற்றுலா தளங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்ட நெரிசல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் பெங்களூரு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து சுற்றுலாவுக்கு 2 பெண் உட்பட்ட 12 பேர் புதுச்சேரி வந்துள்ளனர்.

நேற்று புதுச்சேரி பகுதியை சுற்றி பார்த்தவர்கள் இன்று அரியாங்குப்பம் அடுத்த சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு வந்தவர்கள் கடலில் இறங்கி குளித்து உள்ளனர்.

நீண்ட தூரம் செல்லாதவாறு பாதுகாப்பு ஊழியர்கள் கயிறு கட்டியிருந்ததை மீறி சிலர் குளிக்க சென்றதால் அப்போது ராட்சத அலையில் சிக்கி கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டனர்.

இதில் சிக்கியவர்கள் சத்தம் போடவே அங்கு இருந்தவர்கள் ஆபத்தான நிலையில் இருந்த அதிதீ வயது 23, ஜீவன் 23, ஆகியோரை உயிருடன் விட்டனர், மேலும் அலையில் சிக்கிய பவன் வயது 25. மேகா வயது 27. பிரிட்ஞ்வால் வயது 24 ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.

தகவல் அறிந்தவுடன் அரியாங்குப்பம் போலீசார் இறந்வர்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து கடற்கரையில் சுற்றுலா வந்த பயணிகளை போலீசார் அபாய ஒலி எழுப்பி அனைவரையும் வெளியேற்றினர். மேலும் கடல் சீற்றமாக இருப்பதால் பயணிகள் யாரும் கடலில் இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கையும் விடப்பட்டது.

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த தனியார் நிறுவன ஊழியர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.