தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள கள்ளர் விடுதிகளின் பெயர்களை மாற்றி சமூக நீதி விடுதி என பெயர் மாற்றம் செய்ய அரசு வெளியிட்டுள்ள ஆணையை ரத்து செய்யக்கோரி கருப்பு கொடிகளுடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டமானது ஊரே ஒன்றாக இணைந்து தங்கள் இல்லங்களில் கருப்பு கொடியை கட்டி தங்களுடைய எதிர்ப்பு காட்டி வருகின்றனர். இதை தொடர்ந்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் கள்ளர் பள்ளி முன்பாக நடைபெற்றது.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும், கள்ளர் சமுதாயத்தை இழிவாக பேசிய புதிய தமிழக கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி மகனைக் கண்டித்தும், அரசாணையை திரும்பப்பெற கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
இது குறித்து போராட்டத்தினர் கூறுகையில் எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் எந்த கட்சியினர் ஓட்டு கேட்டு வந்தாலும் நாங்கள் அவர்களை ஊருக்குள் நுழைய விட மாட்டோம். அதே போன்று ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் மாவட்ட செயலாளர்களும் நாங்கள் ஓட்டுக் கேட்டு செல்ல முடியாது. எனவே ஆணையை திரும்ப பெறுங்கள் என பேச்சுவார்த்தை செய்யுங்கள் என்று கூறினார்கள் .