குமரி வரும் சுற்றுலா பயணிகள் படகு அனுமதி டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில், கடந்த 50_ ஆண்டுகளுக்கு மேல் காத்து நீண்ட வரிசையில் காத்திருந்த அந்த தொல்லைக்கு தமிழக அரசின் புதிய அணுகுமுறையால் கடல் நடுவே உள்ள
கண்ணாடிப் பாலம் சுவாமி விவேகானந்தர் சிலை, சுவாமி விவேகானந்தர் நினைவு சின்னம் இவற்றை காணச்செல்ல படகு பயணம் செல்ல ஆன்லைன் டிக்கெட் இன்று (ஆகஸ்ட்_8)ம் நாள் தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோதக்கராஜ் தொடங்கிவைத்து பேசும் போது. உலகின் எந்த பகுதியில் இருந்தும் குமரி வரும் சுற்றுலா பயணிகள் அவர்கள் விரும்பிய தினத்தில் குமரி கடலில் படகு பயணத்திற்கான ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்யமுடியும் என தெரிவித்தார்.

நிகழ்வில் குமரி ஆட்சியர் அழகு மீனா நாகர்கோவிலில் மேயர் மகேஷ், தமிழக வணிக கழக தலைவர் சுரேஷ் ராஜான், கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, மற்றும் கட்சியின் பல்வேறு பொருப்பாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றார்கள்.