மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட 612-குடும்ப அட்டைகள் கொண்ட டி.ஆண்டிப்பட்டி நியாய விலைக் கடையில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன்குமார் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயது முதியோர்களுக்கு நியாய விலைக்கடை பொருட்களை வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கும் திட்டம் தொடர்பாக எண்ணிக்கை மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.








