திமுக தலைவரும் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளான இன்று கன்னியாகுமரி அண்ணா சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள கலைஞரின் உருவப்படத்துக்கு கன்னியாகுமரி நகர திமுக சார்பில் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு நகராட்சித் தலைவரும், திமுக நகர செயலாளருமான குமரி ஸ்டீபன் தலைமை வகித்தார். இதில் நகராட்சி கவுன்சிலர்கள் இக்பால், பூலோக ராஜா, சிவ சுடலை மணி, திமுக நிர்வாகிகள் நிசார், ஆனந்த், கெய்சர்கான், பிரைட்டன், அரிகிருஷ்ண பெருமாள், ரஞ்சித் குமார், சார்லஸ், ரூபின், நகர இளைஞரணி அமைப்பாளர் சின்னமுட்டம் ஷியாம், வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.