நாகர்கோவிலில் சபாநாயகர் அப்பாவை, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும், நாகர்கோவில் நகர திமுக செயலாளர் ஆனந்தன், அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவர் பிரபா ஜி. ராமாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். நாகர்கோவிலில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில்,

உலகளவில் இந்தியாவின் மரியாதை சொல்லும் படியாக இல்லை. இந்திய எல்லைக்குள் ஊடுருவி 24_பேரை கொன்ற பாக்கிஸ்தானை எந்த ஒரு நாடும் கண்டிக்கவில்லை. இதுதான் இந்தியாவின் இன்றைய நிலை.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரது தோட்டத்தில் காவல்துறை அதிகாரி வெட்டி கொல்லப்பட்டுள்ளது சட்டத்தை அவர்கள் எப்படி மதிக்கிறார்கள் என்பதின் அடையாளம்.
கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்க சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய சட்ட வடிவத்தை இவ்வளவு நாட்கள் கவர்னர் அவரிடம் வைத்திருந்தவர்,இப்போது அந்த சட்ட வடிவத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருப்பதின் நோக்கம்.
கலைஞர் சமூக நீதிக்காக பாடுபட்டவார். ஆளுநர் சனாதன கொள்கையை பின்பற்றுபவர்,அவரது சனாதன கொள்கை இடம் கொடுக்க வில்லை , அதனால் ஜனாதிபதிக்கு திருப்பி அனுப்பிவிட்டார்.

முதல்வர் வெளிநாட்டு நிறுவனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் அதன் மூலம் தமிழகத்திற்கு வரும் நிதி ஒன்றிய அரசின் வழியாக தான் வருகிறது. தமிழகத்திற்கு எவ்வளவு நிதி புரிந்துணர்வு திட்டம் மூலம் வந்துள்ளது என்பது மத்திய இணைஅமைச்சர் எல். முருகனுக்கு தெரியும் தெரிந்தும் இப்படி சொல்கிறார்.
மத்திய இணை அமைச்சர் குறைந்த பட்சம் தினசரி பத்திரிகைகளை வாசிக்க வேண்டும். மத்திய அரசின் அறிக்கையிலே தமிழகத்தின் நிதி வருவாய் 11.99 உயர்ந்திருக்கிறது என்பது மத்திய அரசின் அறிவிப்பில் உள்ளது என செய்தியாளர்கள் இடம் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.