கன்னியாகுமரி நகராட்சி கூட்டம் தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது.
கன்னியாகுமரி நகராட்சிக்கு என்று நியமிக்கப்பட்ட ஆணையர் கண்மணி
பங்கேற்ற முதல் கட்டத்தில்.ஆணையர் கண்மணியை உறுப்பினர்களுக்கு அறிமுகம் நிகழ்விற்கு பின் பேசிய ஆணையர் கன்னியாகுமரி நகராட்சியாக மாற்றிய பின் பல்வேறு பணிக்கான அதிகாரிகள் முழுமையாக பணியில் இன்னும் வரவில்லை.

விரைவில் அனைத்து பணித்தளங்களில் அதிகாரிகள் பொறுப்பு ஏற்க இன்னும் இரண்டு மாத காலதாமதம் ஏற்படும். அதுவரை மக்கள் பிரதிநிதிகளான வார்ட் உறுப்பினர்கள் நிர்வாகத்திற்கு துணையாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.
இக்கூட்டத்தில் நகராட்சி துணைத்தலைவர் ஜெனஸ், கவுன்சிலர்கள் சி.எஸ்.சுபாஷ், லிங்கேஸ்வரி, சுஜா, நித்யா, எம்.பூலோகராஜா, இக்பால், சிவசுடலைமணி, ஆனிரோஸ், இந்திரா, சகாய சர்ஜினாள், ஆட்லின், வினிற்றா, ராயப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
