• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சங்கரன்கோவிலில் சாதி சான்றிதழ் வழங்ககோரி திமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீர கோடி வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

அவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் வழங்காததால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோதும், தற்போது தென்காசி தனி மாவட்டமாக உள்ளபோதும் சாதி சான்றிதழ் இன்றி தவிப்பதாக வீர கோடி வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபனிடம் மனு அளித்தனர்.


இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தர்ராஜிடம் திமுக சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. சாதி சான்றிதழ் வழங்குவது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதில் சங்கரன்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்து செல்வி, நகர செயலாளர் சங்கரன், இளைஞரணி சரவணன் உட்பட பலர் உடனிருந்தனர்.