புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு வில்லியனூர் பைபாஸ் சாலையில் என்.ஆர் 75 சதுக்கம் புதிதாக 12 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.

பொதுப்பணித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சதுக்கத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சபாநாயகர் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் எகேடி ஆறுமுகம், கேஎஸ்பி ரமேஷ், பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி, சம்பத், லஷ்மி காந்தன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.