புதுச்சேரி தேங்காய்திட்டு ஸ்ரீ பூரணி ஸ்ரீ பொற்களை சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் ஆலய 38-ம் ஆண்டு ஆடி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் அரியாங்குப்பம் தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் ஐயப்பன் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூரண மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் தொகுதி தேங்காய் திட்டு பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் விழா குழுவினர் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோன்று ஆடி உற்சவ நிகழ்ச்சியில் புதுச்சேரி அதிமுக மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அருட்பிரசாத தாம்பூலம் வழங்கினார். கோவில் நிர்வாகத்தின் சார்பில் ரவி பாண்டுரங்கனுக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் தொகுதியைச் சார்ந்த தேங்காய் தீட்டு பகுதி அதிமுக நிர்வாகிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
