புதுச்சேரி அரசின் குடிமைப் பொருள் வழங்கல் துறை அறிவுறுத்தலின்படி, முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களையும் ஆன் -லைன் மூலம் (e-kyc) சரி பார்க்க பொது சேவை மையத்தை அணுக அரசு அறிவித்திருந்தது,

அதன்படி முத்தியால்பேட்டை தொகுதி மக்கள் சிரமமின்றி குடும்ப உறுப்பினர்கள் விவரங்களை ஆன் -லைன் மூலம் சரி பார்ப்பதற்காக தொகுதி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர்,சரவணன் தொகுதி திமுக அலுவலகத்தில் வாரந்தோறும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்திருக்கிறார்.
அதன் தொடக்க விழா இன்று தொகுதி திமுக அலுவலகத்தில் நடந்தது இந்த சிறப்பு முகாமில் முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்று பயன் பெற்று வருகின்றனர்.

தொகுதி திமுக செயலாளர் சௌரிராஜன், அவைத் தலைவர் வை.எழிலன், தொகுதி திமுக துணை செயலாளர் Jக்ஷரவி , திமுக மக்கள் சேவை மதன் பாபு, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் தங்கராசு,பாபு, பிரகாஷ், பாஸ்கர்,சந்துரு, குவைத்சண்முகம், சிற்றரசு, நாகராஜ், எழில், சுதாகர், மகளிர் அணி தனம், தொகுதி திமுக துணை செயலாளர் திருமதி கலைவாணி, விமலா,சுதா, லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.