• Sat. Sep 20th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் பட்டமளிப்பு விழா..,

BySeenu

Aug 2, 2025

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் நர்சிங், பார்மசி, தொழில்சார் சிகிச்சை, பிசியோதெரபி மற்றும் துணை சுகாதார அறிவியல் ஆகிய கல்லூரிகளுக்கான 14 வது பட்டமளிப்பு விழா தனியார் அரங்கில் நடைபெற்றது…

ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர். பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இதில், ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் மருத்துவர்கள் குந்தவி தேவி, செந்தில் குமார், பாலமுருகன், உமாதேவி, சுசரிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

கவுரவ விருந்தினராக மற்றும் API-PRF இயக்குநர் டாக்டர். முருகநாதன்,கலந்து கொண்டார்.

முன்னதாக டாக்டர் பெரியசாமி பேசுகையில், ஆசிரியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் பட்டதாரிகளை நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களாக வடிவமைப்பதில் கற்றல் ஒரு தொடர்ச்சியான செயல்முறை என்று சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்கள் கல்வியில் உயர் தரத்தை பராமரித்து, இளம் பட்டதாரிகளை சமூகத்திற்கு உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்த அவர்,. நமது இந்திய நாடுங127 கோடி மக்கள் தொகையுடன் நிறைந்து காணப்பட்டாலும், உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில், தலைமை விருந்தினரான மகாராஷ்டிரா மாநில ஆளுநர் . சி.பி. ராதாகிருஷ்ணன்,பல்வேறு துறைகளில் கல்லூரி படிப்பை முடித்த சுமார் 284 இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

முன்னதாக விழாவில் பேசிய அவர்,வெற்றியடைய குழுவாக செயல்பட வேண்டும் என்ற தனது வாழ்க்கைக் கருத்தை பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர்,கற்றல் மற்றும் கடின உழைப்பு வெற்றிக்கு முக்கியம் என்றும், தொழில் வாழ்க்கையையும், வாழ்க்கையையும் மேம்படுத்த இது மிகவும் அவசியம் என தெரிவித்தார்.

மாணவர்கள் தங்கள் ஆர்வம் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் வாழ்க்கைப் பாதையை தேர்வு செய்வதால் வெற்றியை எளிதில் பெறலாம் என அவர் கூறினார்…

விழாவில்,ஸ்ரீ அபிராமி கல்லூரி டீன் டாக்டர் ஜெயபாரதி, ஸ்ரீ அபிராமி செவிலியர் கல்லூரி.முதல்வர் டாக்டர்.ரேணுகா,மருந்தியல் கல்லூரி முதல்வர் ,டாக்டர். தட்சிணாமூர்த்தி, தொழில் சார் சிகிச்சை கல்லூரி முதல்வர் டாக்டர். கே. நரேஷ் பாபு, உடலியக்கவியல் கல்லூரி.முதல்வர் டாக்டர். குகன், சுகாதார அறிவியல் கல்லூரி முதல்வர் மணிமேகலை,உட்பட கல்லூரி துறை தலைவர்கள், மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.