• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பெரம்பலூரில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்

Byமதி

Dec 10, 2021

பெரம்பலூர் மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் மரணத்தையும் ஏற்படுத்தும் என்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில், கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 69 பேரும், டிசம்பர் தொடங்கி தற்போது வரை 28 பேரும்,
இன்றைய நிலரவபடி, 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மேலும் 2 பேர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுமட்டுமின்றி, புற நோயாளிகள் பிரிவில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.