சென்னை விமான நிலையம் வெளிநாடு உள்நாட்டு பயணிகள் இதயக் கோளாறு (ஹார்ட் அட்டாக் கார்டியாக் அரஸ்ட்) காரணமாக துயரும் போது
விமான நிலைய மருத்துவர்கள் விரைந்து வந்து பார்த்து முதலுதவி செய்து
உயிர் பிழைக்க வைப்பார்கள்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை சென்னை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் விரைந்து வந்து சிகிச்சை அளித்து பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சென்னை நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பார்கள்.
தற்போது காவேரி மருத்துவ மனை சென்னை விமான நிலையத்தில் சிகிச்சை அளிக்கும் அனுமதியைப் பெற்று சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ஆனால் பாதிப்பிற்கு உள்ளான நோயாளிக்கு உயிர் காக்கும் மருந்துகள் அளிப்பதில்லை. மாறாக செவிலியர்கள் பயணி சோதனை செய்து
நகரில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்து
பில் லட்சக்கணக்கில் வசூலித்து விடுவார்கள்.
விமான நிலைய அதிகாரிகள் ஊழியர்கள் கோரிக்கை வைப்பது என்னவென்றால்
விமான நிலையத்தில் காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் 24மணிநேரமும் இருந்து சிகிச்சை அளித்து பயணிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்.
உடனடியாக இதய பாதிப்பு ஏற்பட்டவருக்கு மாத்திரை சேகரித்து தயார் நிலையில் இருக்கவேண்டும்.

செவிலியர்கள் சோதித்து நகரில் உள்ள மருத்துவருக்கு தகவல் தெரிவிப்பார்கள்.
அதைத் தொடர்ந்து பயணி ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்படுகிறார்கள்.
உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளாததால் இதுவரை ஏழு பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் ஊழியர்கள் உடல்நலக்குறைவு காரணமாக அவதிக்குள்ளாகிறார்கள்.