சென்னை வேளச்சேரி அரிமா சங்கம்,தீபம் அறக்கட்டளை மற்றும் மெல்வின் ஜோன்ஸ் இரத்த வங்கி இணைந்து நடத்திய இரத்த தான முகாம் தீபம் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. இந்த இரத்த தான முகாம் தீபம் அறக்கட்டளை நிறுவனர் பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் வேளச்சேரி அரிமா சங்கத்தின் சாசன உறுப்பினர் லயன் லட்சுமணன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசும் போது உயிர்காக்கும் ரத்ததானம் அனைவரும் செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.இந்த நிகழ்வில் இளைஞர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட பொதுக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் வேளச்சேரி அரிமா சங்க முன்னாள் தலைவர்கள், தலைவர் ராஜா, செயலர் கில்பர்ட், பொருளாலர் ஶ்ரீகுமார், துணை பொருளாலர் மகாலிங்கம், துணைத் தலைவர்கள் அரிமா சந்திரன், ஜெகந்நாதன், அரிமா சு சேகர், அரிமா நடராஜன், அரிமா காமராஜ், சேர்மன்கள் சீனிவாசன், கதிரவன், மோகன்ராஜ் உட்பட 25 அரிமாக்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் போது 200 நபர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.