• Sat. Sep 20th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

குமரியில் திமுகவினர் மக்களை திரட்டும் முயற்சி..,

குமரி மாவட்டத்தில் உள்ள 6_சட்டமன்ற தொகுதிகளில் இன்றைய கட்சிகளின் நிலவரம் என்பது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தொகுதிகள் விளவங்கோடு குளச்சல் கிள்ளியூர். திமுகவின் சட்டமன்ற தொகுதி பத்மநாபபுரம் அதிமுகவின் சட்டமன்ற தொகுதி கன்னியாகுமரி பாஜகவின் சட்டமன்ற தொகுதி நாகர்கோவில்.

வரும் சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி, நாகர்கோவில் தொகுதிகளை திமுக , காங்கிரஸ் கூட்டணி வேட்ப்பாளர்களை மீண்டும் வெற்றி பெறவைக்கும் முயற்சியில் திமுக மிக,மிக வேகமாக தமிழக முதல்வர் வழங்கியுள்ள மக்கள் நலத்திட்டங்களை வீடு, வீடாக சென்று ஆதரவு திரட்டும் நிலையில். பொது வெளியில் மக்களை ஈர்க்கும் வகையில்,

கொட்டாரத்தை அடுத்துள்ள மகாராஜபுரத்தில் கொட்டும் மழையிலும் நடைபெற்ற தெருமுனை பிரசாரத்தில், சிறப்பு பேச்சாளரான குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் ஆன மகேஷ்க்கு கட்சி நிர்வாகி குடை பிடித்து நிற்க மேயர் மகேஷ் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சாதனையை பட்டியல் இட்டார்.

தெருமுனை கூட்டத்தில் பேசிய அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு வரும் சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி யில் திமுக வேட்பாளர் யார்?என்று கட்சியினர் பார்க்காமல். உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளரை இந்த முறை வெற்றி பெற செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கூட்டத்தினரிடம் கோரிக்கை வைத்தார்.

கொட்டும் மழையிலும் திமுகவினர் சாலை ஓரத்து தடுப்புகளில் தின்று கூட்டத்தை கேட்டனர். தெருமுனை கூட்டத்திற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் மாநில திமுக வர்த்தகர் அணி இணை செயலாளர் வழக்கறிஞர் தாமரை பாரதி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன், துணை அமைப்பாளர் சரவணன், மற்றும் பல்வேறு பொருப்பாளர்கள் மழையில் நனைந்த வண்ணம் கூட்டத்தில் பங்கேற்றது அந்த பகுதியில் இந்த காட்சியை பார்த்தவர்கள் மத்தியில் ஒரு பேச்சுப் பொருளாகி உள்ளது.