• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

நேரத்தை கடந்து சாமி தரிசனம் செய்த அதிகாரி..,

BySeenu

Jul 23, 2025

கோவையில் பழைமை வாய்ந்த பிரசித்தி பெற்ற பேரூர் சிவன் கோவிலில் கடந்த 20ம் இரவு பூஜைகள் முடிந்து கோவில் நடை பூட்டப்பட்ட பிறகு எஸ்.பி.பாண்டியராஜன் சென்று சாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகள் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

இந்நிலையில் அவர் மீதும், கோவில் அலுவலர்கள், நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணி அமைப்பினர் கோவை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திலும் ஒருங்கிணைந்த சிவனடியார்கள் திருக்கூட்டம் அமைப்பின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்தனர்.

இது குறித்து பேட்டியளித்த இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ், ஆகம விதிகளை மீறி தனி நபருக்காக நடை திறக்கப்பட்ட சம்பவம் தற்போது பேசு பொருளாக மாறி உள்ளதாகவும் இதை கண்டுக்கொள்ளாமல் அறநிலைய துறை உறங்கி கொண்டிருப்பதாக விமர்சித்தார். அந்த நபரை கைது செய்ய வேண்டும் அல்லது பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எதற்கும் பதில் அளிக்கமாட்டார் அப்படி இருக்கும் போது இதற்கு மட்டும் பதில் அளித்து விடுவாரா? என்றுன் கேள்வி எழுப்பிய அவர் ஆகம விதிகள் மீறப்படும் போது மக்களே தன்னெழுச்சியாக போராட முன்வருவார்கள் என்றும் இந்து சமய அறநிலைய துறையினர் கோவிலை வியாபார நிறுவனமாக தான் பார்ப்பதாகவும், அவர்களை பொறுத்தவரை தெய்வம் என்பது உண்டியல் தான் என விமர்சித்தார். இந்த விவகாரம் மக்கள் போராட்டமாக மாறுவதற்கு முன்பு அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.