கோவை, சிவானந்தா காலனி பகுதியில் நேற்று இரவு TN 38 2398 என்ற 5 எண் கொண்ட அரசு நகர பேருந்து காந்திபுரம், புலியகுளம், ராமநாதபுரம், டவுன்ஹால் வழியாக மீண்டும் சிவானந்த காலனி வந்து அடைகிறது.

இந்நிலையில் நேற்று சிவானந்த காலமையில் இருந்து புறப்பட்ட போது பேருந்து ஸ்டார்ட் ஆகவில்லை, பேட்டரியில் இருந்து வரும் மின்சாரம் கோளாறு காரணமாக பேருந்து இயக்க முடியவில்லை, இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் சிலர் இறங்கி பேருந்தை தள்ளு நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மேலும் அந்தப் பேருந்து நீண்ட நேரம் தள்ளிப் பார்த்தும் ஸ்டார்ட் ஆகாததால், வேறு பேருந்தில் பயணிகள் ஏறிச் சென்றனர்.

இதேபோன்று நேற்று ஒத்தக்கால் மண்டபத்தில் பேருந்து பழுதாகி தீ விபத்து ஏற்பட்டது. உரிய நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாததால், ஆத்திரமடைந்த பயணிகள் பேருந்து கண்ணாடிகளை உடைத்த சம்பவமும் அரங்கேறியது.
அதேபோன்று இரவு வேலைகளை முடித்து வீட்டுக்குச் செல்ல அரசு நகரப் பேருந்து, நரக பேருந்தாக மாறியதாக புலம்பிய பயணிகள் ..