மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான வாகனவடிவமைப்பு போட்டி ஸ்ரீ சாய்ராம் கல்வி குழும முதன்மை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து தலைமையில் நடைபெற்றது.

இந்திய ஆட்டோமோட்டிவ் பொறியாளர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டி, பொறியியல் மாணவர்களின் ஆட்டோமொபைல் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என தலைவர் பால்ராஜ் சுப்பிரமணியம் கூறினார்.
தேசிய அளவில் 3 நாள்கள் நடைபெறும் கல்லூரி மாணவர்களுக்கான வாகன வடிவமைப்பு போட்டியை ரெனால்ட் நிசான் நிறுவன துணைத் தலைவர் என்.பாலசுப்ரமணியன், ஹோண்டா மோட்டார்ஸ் சந்திரசேகர் ஆகியோர் தொடக்கி வைத்து மாணவர்களின் புதிய வடிவமைப்பு வாகனத்தை திறந்து வைத்து அதனை பார்வையிட்டனர்.

தொடக்க விழாவில் முதல்வர்கள் முனைவர் ராஜா, முனைவர் பழனிகுமார், மாணவர்களின் விவகாரதுறை தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆட்டோமோட்டிவ் பொறியாளர்கள் சங்கத் தலைவர் பால்ராஜ் சுப்பிரமணியம் பேசியதாவது தற்போது ட்ரோன் மூலம் பறக்கும் வாகன தயாரிப்பு குறித்த மாணவர்களின் செயல்திட்டம் உருவாக்கும் திட்டம் உள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் தற்போது இந்திய வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிஎம்டபிள்யூ,டெஸ்லா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்றார் அவர்.

ஸ்ரீசாய்ராம் கல்விக் குழுமத் தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து பேசுகையில், ஆட்டோமொபைல் துறையில் இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.போட்டியில் இயந்திரவியல் மாணவிகள் அடங்கிய 27 குழு மாணவர்கள் போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்றார்.