தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் தேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்த்திட மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் கருப்பு முக்காடு இட்டு ஒப்பாரி போராட்டம் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது.
சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுந்தரம் கலந்து கொண்டு துவக்கவுரை ஆற்றினார். மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநில துணைத்தலைவர் மகாவிஷ்ணு சிறப்புரை ஆற்றி ஆர்ப்பாட்டத்தை துவங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஏராளமான பெண்கள் தலையில் கருப்பு முக்கடுயிட்டு ஒப்பாரி போராட்டத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் அங்கன்வாடி அமைப்பாளர்கள் சமையலற்கள் உதவியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வருவாய் கிராம உதவியாளருக்கு இணையாக மாதாந்திரம் ஓய்வூதியம் 6750 ரூபாய் அதிக விலைப்படி வழங்கப்பட வேண்டும்.
தேர்தல் வாக்குறுதி எண் 313 ன் படி முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி 01/10/2017 முதல் 1500 என்ற அடிப்படையில் 2.57 காருணியால் பெருக்கி ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும்
என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலையில் கருப்பு முக்காடு இட்டு ஒப்பாரி முறையில் ஓய்வு பெற்ற பெண் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.