கோவையைச் சேர்ந்தவர் மதன்குமார் இவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வாட்ஸ் அப்பில் பேசிய நபர்கள் ஆன்லைன் ஸ்டாக் வர்த்தகம் மூலம் பணம் முதலீடு செய்ய கூறினர்.
இதன் மூலம் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினர். இதற்காக மதன்குமாரின் பெயரில் செயலி மூலம் புதிதாக, பயனாளி கணக்கை ஒன்றை துவங்கி அதில் முதலீடு செய்ய கூறி உள்ளனர்.

இதைத் தொடர்ந்து அவர்களது பல்வேறு வங்கி கணக்குகளில் மொத்தம் ரூ 47,40,000/- பணத்தைப் மதன்குமார் முதலீடு செய்து உள்ளார். ஆனால் அதன் பிறகு அவர்கள் கூறியபடி பணம் லாபத் தொகை கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர். இதில் ரூபாய் 40,00,000 பணத்தை அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்திர தேவால் என்பவரின் வங்கி கணக்கில் அனுப்ப கூறி பெற்று இருந்தனர்.
இதைத் தொடர்ந்து மதன்குமார் கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இந்த மோசடி குறித்து புகார் செய்தார். அதன் பேரில் சைபர் கிரைம் காவல் துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் ராஜஸ்தானி சேர்ந்த சுரேந்திர தேவாலை கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை,. மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் 4 ல் நடந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுரேந்திர தேவாலுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.