தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பெரோஸ் கான் அப்துல்லா இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து கரூர் மாவட்டத்தின் 34வது காவல் கண்காணிப்பாளராக ஜோஸ் தங்கையா பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக அலுவலகம் வந்த அவருக்கு ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து முன்னாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா, புதிய மாவட்ட கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையாவிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
இதனை தொடர்ந்து பதவி ஏற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளருக்கு பூங்கொத்துக்கள், கொடுத்து வரவேற்றார்.
