சென்னை அடுத்த நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் இந்தியன் அபாகஸ் நிறுவனம் சார்பில் 6-வது சர்வதேச அபாகஸ் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் நாடு முழுவதிலிருந்தும் 2500-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் பங்கு பெற்றனர்.சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்தியன் அபாகஸ் நிறுவனம் சர்வதேச அளவில் மனக்கணிதப் போட்டியை 26 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்தாண்டு சர்வதேச எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டியை சென்னையில் நடத்தியது. இந்த போட்டியினை தமிழ்நாடு அரசின் மாநில கல்வி கவுன்சில் ஆராய்சி மற்றும் பயிற்சி துணை இயக்குனர் டாக்டர் ஷமீம் தொடங்கி வைத்தார்.

வெற்றிபெற்ற மாணவ- மாணவியர்களுக்கு தமிழ்நாடு தொழிலாளர் துறை ஆணையர் ராமன், சான்றிதழ்களும், பதக்கம், பரிசு பொருள்கள் மற்றும் வெற்றி கோப்பைகளும் வழங்கி கெளரவித்தார்.இந்த போட்டியினை சிறப்பான முறையில் நடத்தும் வகையில் இந்தியன் அபாகஸ் அமைப்பு பல்வேறு ஏற்பாடுகளை செய்து இருந்தது.
போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு சரியான வழிமுறைகளுடன் சிறப்பான தேர்வு எழுதி வெற்றி பெற சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள்.
இந்த போட்டி குறித்து இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பஷீர் அகம்மது கூறுகையில்
எங்களது முதல் நோக்கம் தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள சிறிய கிராமத்தின் எளிய மற்றும் அனைத்து மாணவர்களும் இந்த கணித பயிற்சியினை பயன்படுத்தி சாதனை மாணவர்களாக திகழ வேண்டும்.
அது மட்டுமல்லாது உலக அளவில் இந்திய மாணவர்கள் எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் சாதனை படைத்து திகழ வேண்டும், அந்த இலக்கை நோக்கி நாங்கள் 26 ஆண்டுகளாக ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தி வருகிறோம்.
மேலும் இதை சர்வதேச அளவில் போட்டியாக நடத்தவும் மேலும் அரசு பள்ளிக்கூடங்களில் இதை ஒரு கணித பாடமாகவும் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியாக மாநில அரசு அறிமுகம் செய்தால் சர்வதேச அளவில் நாம், நமது இந்திய மாணவர்களை உலக அரங்கில் கல்வியில் சிறக்க செய்யலாம் என்றார்.













; ?>)
; ?>)
; ?>)