அகில இந்திய கட்டுநர்கள் சங்க தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய மாநிலங்களின் சார்பில் நடைபெற்ற மாநில மாநாடு திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் வெங்கடேசன் அளித்த பேட்டியில், திண்டுக்கல் மையத்தில் நடைபெற்ற மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட மைய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் அரசு ஒப்பந்தம் குறித்து, கட்டுநர்ளுக்கு தர வேண்டிய நிவாரணம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. கிரஷர்,ஜல்லி விலை ஏற்றம் குறித்து அதற்காக தனி குழு அமைத்து அதில் உள்ள பிரச்சனைகளை அரசாங்கத்திற்கு அணுகி நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை போன்ற முக்கியமான துறைகளில் புதிய விலைப்பட்டியல் வெளியிடப்படவில்லை. இது சம்பந்தமாக முதலமைச்சரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். புதிய விலைப்பட்டியல் வந்த பின்பு தான் டெண்டர் கோரிக்கை விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். வாழ்வாதார பிரச்சனைகளாக இருக்கக்கூடிய ஒப்பந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

கட்டுமான பொருட்கள் அனைத்திற்கும் ஜிஎஸ்டி போடப்பட்டிருக்கிறது என்று கேட்ட கேள்விக்கு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஒப்பந்தங்களுக்கு 12 சதவீதம் இருந்ததை கடந்த இரண்டு வருடங்களாக 18 சதவீதமாக உயர்த்தி உள்ளனர். இது குறித்தும் முதல்வர் மற்றும் நிதி அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளோம். இதனால் அரசும் வரி செலுத்துகிறது அதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே பொதுப்பணித்துறை அமைச்சர் ரகுபதி முன்னிலையில் கட்டுமான வல்லுநர்கள் மற்றும் கல்குவாரி உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று அதில் 2000 ரூபாய் குறைப்பிலிருந்து ஆயிரம் ரூபாய் குறைத்தார்கள். அதுபோக 500 ரூபாய் குறைக்க கோரிக்கை கொடுக்கப்பட்டது. அதுவும் ஒரு சில மாவட்டங்களில் குறைக்கப்பட்டது.
ஒரு சில மாவட்டங்களில் குறைக்கப்படவில்லை. விலை குறைத்தாலும் சாலை பணிகள் செய்யும் ஒப்பந்தக்காரர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சாலை போடுவதற்கு ஜல்லி எம் சாண்ட் தான் அதிகமாக தேவைப்படுகிறது.
எங்களது கோரிக்கைகள் கடிதங்களாக அனுப்பியுள்ளோம் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை எனில், ஒப்பந்தங்களில் கலந்து கொள்வதில்லை என்றும் மேற்கொண்டு பணிகளை செய்வது நிறுத்தப்படுவதும் அறிவிக்கப்படும் என பேசினார்.
பேட்டியின் போது மாநில முதன்மை நிர்வாகிகள் பரமேஸ்வரன் சிவக்குமார் ராதாகிருஷ்ணன் இளங்கோவன் வீரகுமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.




