• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

இந்து மற்றும் கிறிஸ்துவ மக்கள் கற்களால் தாக்குதல்..,

ByVasanth Siddharthan

Jul 21, 2025

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்டது பெருமாள் கோவில்பட்டி இங்கு ஹிந்து மற்றும் கிறிஸ்துவ வன்னியர் சமூகத்தை சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பெருமாள் கோவில் பட்டியில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் முன்பு வைக்கப்பட்ட இருந்த கற்களை கிறிஸ்தவ வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பிடுங்கி எறிந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அங்கு வசிக்கக்கூடிய இந்து வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அதனை தட்டி கேட்டதாக கூறப்படுகிறது.

காளியம்மன் கோயில் முன்பு உள்ள இடம் சம்பந்தமான பிரச்சினை பல வருடங்களாக இந்து மற்றும் கிறிஸ்துவ வன்னியர் சமுதாயங்கள் இடையே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போலீசார் இது சம்பந்தமாக பேச்சு வார்த்தைக்கு வந்துள்ளனர்.

அப்போது போலீசார் முன்னிலையில் இந்து மக்கள் கிறிஸ்துவ வன்னியர் மக்கள் கட்டையை வைத்து தாக்கியும், கற்களை வீசி தாக்கி கொண்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட சண்டையில் முத்துராஜ் உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரு தரப்பினர் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகிய தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.