கன்னியாகுமரியில் உள்ள ‘சீ வியூ’ நட்சத்திர ஹோட்டலில், தேசிய சணல் வாரியம் மற்றும் டெட் கிராட் இணைந்து ஒரு நாள் பயிற்சி பற்றிய அறிமுகம் கலந்தாய்வு நடைபெற்றது.

இந்த பயிற்சி பட்டறையில். நிர்வாக இயக்குநர் சுப்புராம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பொதுசெயலாளர் அங்குசாமி, தேசிய சணல் வாரியம் இயக்குநர் கிசான் சிங் குத்தியல், துணை இயக்குநர் டாப்டாட் முகர்ஜி,உதவி இயக்குநர் மைசுமி பாண்டா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் பிளாஸ்டிக் பயன் பாட்டை தவிர்த்து,அதற்கு மாற்று மூலம் பொருளாக சணல் கொண்டு, மக்களின் அன்றாட பயன்பாட்டு பொருட்களை தயாரிப்பது. இதற்க்கு தேசிய சணல் வாரியம் பயன் பாட்டு இயந்திரம் மற்றும் 35_ நாட்கள் பயிற்சி கொடுக்கிறது. பயன் பாட்டு இயந்திரத்தை வங்கி மூலம் தொழில் பயிற்சி அடிப்படையிலான கடன் வழங்கும், பயிற்சி காலமான 30_நாட்களில் உணவு வழங்கப்படும், உதவித்தொகை எதுவும் வழங்கப்படாது.
பயிற்சி பெறும் பெண்கள் ஏற்கனவே தையல் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும் இதுவே இந்த பயிற்சிக்கான அடிப்படை தகுதி.

குமரி மாவட்டத்தில் இரண்டு இடங்களில் இந்த பயிற்சி இடங்கள் விரைவில் தொடங்க இருப்பதாகவும். இதற்கான ஒரு பயிற்சி கூடம் குழித்துறையில் விரைவில் தொடங்க இருப்பதாகவும், மற்றொரு இடம் ஆய்வில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
குமரி ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி என்பதால். குமரி மாவட்டத்தில் தொடங்கும் இரண்டு சணல் பொருட்கள் தயாரிப்பு கூடங்களில் உற்பத்தி செய்யப்படும் சணல் பொருட்களை விற்பனை செய்ய கன்னியாகுமரியில் காட்சிக்கூடத்தின் கூடிய விற்பனை மையம் அமைக்க இருக்கிறது. நிகழ்வின் நிறைவில் தலைவர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.