திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே திருச்சி முதல் சேலம் செல்லும் புறவழிச் சாலையில் உள்ள தொட்டியம் காவல் நிலையம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் வழியாக தொட்டியம் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் ரோந்து போலீசார் ரோந்துபனியில் சென்ற பொழுது சந்தேகத்திற்கு இடமாக இரு பைகளை வைத்துக்கொண்டு நின்று கொண்டு இருந்தவரை காவல் ஆய்வாளர் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கோபிநாத் என்பதும் அவர் வைத்திருந்த இரு பைகளில்
ரூபாய் 1 கோடி 14 லட்சம் இருந்துள்ளது, பணம் எங்கிருந்து கொண்டு வருகிறாய் என கேட்டதற்கு முறையான ஆவணங்கள் இல்லாமலும், முன்னுக்குப் பின் சரியாக பதில் கூறாததால் சந்தேகத்திற்கு இடமாக இருந்ததால் தொட்டியம் காவல் ஆய்வாளர் சரவணன் முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமாரிடம் தகவல் தெரிவித்து அவர் உத்தரவின் பெயரில் திருச்சி வருமானவரித்துறையினருக்கு தகவல் தெரிவித்து, அவர்களிடம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கோபிநாத்தையும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
