• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிங்கத்துடன் மோத தயங்கி ஒதுங்கிய யானை

அருண்விஜய் நடிப்பில் பார்டர், ஓ மை டாக், அக்னிச் சிறகுகள், பாக்ஸர் , சினம் மற்றும் வா டீல் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸூக்கு லைன் அப்பில் இருக்கும் படங்கள்.

இப்படங்களுடன் ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘யானை’. அருண்விஜய்க்கு நாயகியாக ப்ரியா பவானிஷங்கர் நடித்துவருகிறார். இப்படத்தை அடுத்த வருட பிப்ரவரியில், சூர்யாவின் நடிப்பில் தயாராகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் செய்துவிட படக்குழு திட்டமிட்டிருந்தது.

அருண்விஜய்யின் 33வது படமாக உருவாகிவரும் ‘யானை’ படம் கொஞ்சம் தள்ளிப் போகும் என்று சொல்லப்படுகிறது. நமக்குக் கிடைத்த தகவல்படி, அடுத்த வருடம் 2022 ஏப்ரல் 01ஆம் தேதி படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘விக்ரம்’. விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தினை அடுத்த வருடம் ஏப்ரல் 01ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

ஆக, கமல்ஹாசன் திரைப்படத்துடன் நேரடியாக மோதுகிறார் அருண்விஜய். இந்த இடத்தில், மற்றுமொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

சமீபத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கமல்ஹாசனுக்கு ஏற்பட்டது. தற்பொழுது, கொரோனாவிலிருந்து மீண்டு நலமுடன் இருக்கிறார் கமல்ஹாசன். விரைவிலேயே படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்கிறார்கள். கமல்ஹாசனின் விக்ரம் படப்பிடிப்பில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்பு அதிகம். அப்படியென்றால், சோலோவாக வருவான் ‘யானை’.