தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதலுடன் இந்து சமய அறநிலையதுறை சார்பில் திருப்பரங்குன்றம் கோவிலில் 4 ஏழை ஜோடிகளுக்கு மூன்று லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள திருவாச்சி மண்டபத்தில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா மற்றும் அறங்காவலர்கள் சூரிய நாராயணன், சண்முகசுந்தரம் மற்றும் திருக்கோவில் பட்டார்கள் முன்னிலையில் மதுரை ஹார்வி பட்டியைச் சேர்ந்த 1,லோகநாதன் -மீனாட்சி சுந்தரி விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்தராம கிருஷ்ணன் -ஆனந்தி 3, திண்டுக்கல் பிரகாஷ் -ஜெயபாரதி 4,விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த குருநாதன் – பவித்ரா உள்ளிட்ட நான்கு ஜோடிகளுக்கும் முகூர்த்த நேரமான காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் அனைவரது முன்னிலையில் கோவில் திருவாச்சி மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

மணமக்களுக்கு தமிழக அரசு சார்பில் திருமணத்திற்கு அரைப்பவுன் தங்கத்தாலி ரூ.3 லட்சம் மதிப்புள்ள பிரிட்ஜ்,பீரோ, கட்டில்,மெத்தை குத்துவிளக்கு உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாட்டினை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.