புதுக்கோட்டை திருமலைராய சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் இன்று தமிழ்நாடு அரசு புதுக்கோட்டை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகள் காண சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த கால்நடை பிரத்தேக முகாமில் கால்நடைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் கால்நடைகளுக்கு என்னென்ன சத்தான உணவுகள் வழங்க வேண்டும். ஆடு மாடு நாய்கள் உள்ளிட்டவைகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவர்கள் கால்நடை வளர்பிறகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் தற்பொழுது கால்நடைகளுக்கு கோமாரி நோய் வராமல் இருப்பதற்காக தடுப்பூசி போடும் பணி இன்று துவங்கியது.
இதனை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா கலந்து கொண்டு குமாரி நோய் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்து சிறப்பித்தார். இந்த முகாமில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த கால்நடைகள் விழிப்புணர்வு முகாமில் பிரத்தயமாக நாய் மாடு உள்ளிட்டவைகள் பிரசயமாக அல்ட்ரா ஸ்கேன் மூலம் கால்நடைகள் சினை பரிசோதனை நடைபெற்றது.
இதனை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அருணா இவ்வளவு பிரத்தியமாக இயந்திரம் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறதா? என்று மருத்துவரிடம் கேட்டறிந்து ஆட்சியில் முகாம்களை பார்வையிட்டார். மேலும் சிறப்பாக விவசாயம் செய்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு வெறிநாய் ஊசிகள் போடப்பட்டது.