• Mon. Jun 1st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

90 நாள் பயிற்சி முகாம் நிறைவு விழா..,

ByAnandakumar

Jul 1, 2025

கரூர் – ஈரோடு சாலையில் நொய்யல் அடுத்த வேட்டமங்களம் கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 141வது தீயணைப்போர் பயிற்சி கடந்த 3 மாதங்களாக துவங்கி நடைபெற்று வந்தது. தீயணைப்பு துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 650 வீரர்களுக்கு சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 7 இடங்களில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

கரூர் மாவட்டத்தில் இக்கல்லூரியில் தொடங்கப்பட்ட பயிற்சி முகாமில் 100 தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு 90 நாட்கள் அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்ட நிலையில், முகாமின் நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினரும் பார்வையாளர்களாக பங்கேற்றனர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நினைவு நாள் விழாவில் தீயணைப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர். மேலும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பார்வையாளர்கள் இதனை கண்டு ரசித்தனர்.

நிகழ்ச்சியில் மூன்று தீயணைப்பு வாகனம் மூலம் மூவர்ண நிறத்தில் தண்ணீர் மூலம் பீய்ச்சி அடித்து காட்சிப்படுத்தியது அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும், காவலர் ஒருவரின் மகன் சினிமா பாடல்களுக்கு நடனமாடியும், தீயணைப்பு வீரர்கள் பாடல்கள் பாடியும், விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தேர்வுகள் முடிந்து இன்று சான்றிதழ்களும் சமர்ப்பிக்கப்பட்டன. தேர்வில் வெற்றி பெற்றவர்கள் விரைவில் தீயணைப்பு நிலையங்களுக்கு பணிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.