• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு..,

ByS. SRIDHAR

Jun 30, 2025

புதுக்கோட்டை சரகம், புதிய சக்தி நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நீதி வழங்கவும், சித்த மருத்துவ அலுவலரால் பாதிப்புக்குள்ளான பட்டியலின பெண் நிரோஷாவுக்கு நீதி வழங்கவும், புதுக்கோட்டை மாநகர் காந்தி நகரில் வசிக்கும் இருபதுக்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு புதுக்கோட்டை வடக்கு கிராமத்தில் வழங்கிய பட்டாவைகிராம கணக்கில் ஏற்றி நீதி வழங்கவும், பத்துக்கு மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரமாக விளகும் வல்லநாட்டு கண்மாயில் கலக்கும் கழிவு நிரை அகற்ற நடவடிக்கை எடுக்கவும் கோரி புதுக்கோட்டை நீலம் பண்பாட்டு மையத்தினரால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாதிக்கப்பட்ட மக்களுடன் காத்திருப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் பேரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவருவதால், திருக்கோகர்ணம் காவல் துறையினர் உதவி காவல் ஆய்வாளர் தெரிவித்ததன் அடிப்படையில் தொடர்புடையவர்களை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் அமைதியான சூழ்நிலை ஏற்படுத்த ஏதுவாக புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் இன்று 06.06.2025 முற்பகல் 11.00 மணியளவில் நடத்தப்பட்டது.

இந்த சமாதானக் கூட்டத்தில், திருக்கோகர்ணம் காவல் ஆய்வாளர், மண்டல துணை வட்டாட்சியர், திருக்கோகர்ணம் காவல் உதவி ஆய்வாளர், புதுக்கோட்டை சரக வருவாய் ஆய்வாளர், புதுக்கோட்டை வடக்கு வட்ட கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர்
கலந்து கொண்டனர்.

இருதரப்பினர் என காவல் தறையினரால் குறிப்பிடப்பட்ட A தரப்பினர் மற்றும் B தரப்பினர் சார்பில் கீழ்கண்ட நபர்கள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பட்ட வழங்கக் கூடிய மனு அளிக்கப்பட்டது