கடந்த 2 நாட்களாக சமூக வலைத்தளங்களை கூமாப்பட்டியின் இயற்கை எழில் மிகு பகுதியிலிருந்து அதன் சிறப்புகளை “ஏங்க வாங்க” என்ற வாக்கியதுடன் ஆக்கிரமித்தவர் தான் கூமாபட்டியைச் சேர்ந்த இளைஞர் தங்கப்பாண்டி. இவர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த கூமாபட்டியின் இயற்கை எழில் மிகுந்த நீர் நிலைகள் மற்றும் பசுமை நிறைந்த விவசாய பகுதிகளை காண மிகுந்த ஆர்வமுடன் தமிழகத்தின் திருச்சி திண்டுக்கல் மதுரை, திருவண்ணாமலை அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் இன்று காலை முதல் படையெடுக்க துவங்கியுள்ளனர்.

சமூக வலைத்தளத்தில் வெளியான ரீல்சை நம்பி வந்த இளைஞர்கள் மிகுந்த ஏமாற்றத்தை சந்தித்துள்ளதாக வருத்தம் கொள்கின்றனர். ரீல்சில் கண்ட காட்சிகளை காண முடியாத நிலையிலும் ரிலீஸ் வெளியிட்ட இளைஞருடன் சேர்ந்து செல்பி எடுத்தும் அவரது டயலாக்கை பேசியபடி வீடியோ எடுத்துக்கொண்டும் நிம்மதியடைந்தனர். ரீல்ஸை பார்த்ததிலிருந்து இந்த பகுதியை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆசையோடு வந்த நிலையில் இப்பகுதியில் உள்ள நீர் நிலைகளுக்கு செல்ல பொதுப்பணித்துறை தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதாகவும் இங்குள்ள இயற்கை எழில் மிகுந்த சூழல் கண்களுக்கு விருந்தளித்தாலும், அந்தப் பகுதிகளுக்குள் சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை தருவதாக கவலை தெரிவிக்கின்றனர் வெளியூர் சுற்றுலா வாசிகள். இருப்பினும் ஒரு சில இளைஞர்கள் பிளவக்கல் அணையின் பின்பக்கத்தில் சென்று குளித்து மகிழ்ந்ததாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனிடையே தனது ரீல்சை கண்டு பல்வேறு வெளியூர்களில் இருந்து வருகை தந்த இளைஞர்கள் நீர் நிலைகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வது தமக்கு மிகுந்த வருத்தத்தை தருவதாகவும், கூமாபட்டி சுற்றுலாத்தலமாக அறிவிக்க அனைத்து நிலைகளிலும் தகுதி வாய்ந்த இடமாக இருந்ததன் காரணமாகவே தான் தொடர்ந்து தங்கள் பகுதியின் பெருமைகளை ரிலீஸ் ஆக வெளியிட்டதாக பெருமிதம் கொள்ளும் இளைஞர் தங்கப்பாண்டி தமிழக அரசு இப்பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவித்தால் கூமாபட்டி விவசாயத்திற்கு அடுத்தபடி பொருளாதார சூழல் மேம்பாடு ஏற்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகள் மகிழ்வதற்கு பல்வேறு நீர்நிலைகள் இருந்தாலும் அவற்றை பொதுப்பணி துறையினர் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு தடை செய்து வைத்துள்ளதால் ஏமாற்றம் அடைவதாகவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக பிளவுக்கள் அனை பகுதியில் பொதுமக்கள் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு தடை செய்யப்பட்டு வைத்துள்ளதாகவும் பிளவுக்கள் அணைப்பகுதியில் உள்ள பூங்காவை சீரமைக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை புனரமைக்கப்படாமல் மக்களின் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதாகவும் குற்றம் சாட்டும் இளைஞர் தங்கப்பாண்டி இதனை சுற்றுலாத்தலமாக மாற்றி அதற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.