• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து : நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்

Byமதி

Dec 8, 2021

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருப்பது இந்திய முப்படையின் தலைமை தளபதி என்பதால், இந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் சென்ற எம்ஐ 17 வி5 ரக ராணுவ ஹெலிகாப்டர் கோவை மாவட்டம் சூலூர் விமானதளத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ மையத்துக்கு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 10 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் செய்து ஆய்வு மேற்கொண்டார். இந்த விபத்து தொடர்பாக தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் அளித்த பேட்டியில், தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

வனப்பகுதி என்பதால் அதிகம் பேர் மீட்பு பணிகளில் ஈடுபட முடியவில்லை. 14 பேர் ஹெலிகாப்டரில் பயணித்துள்ளனர். ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலை குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை. அடர்த்தியான வனப்பகுதி என்பதால் மீட்பு நடவடிக்கை சிரமமாக உள்ளது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்து நடந்தது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் இன்று மாலை அறிக்கை தாக்கல் செய்கிறார். முதலில், அவர் நேரடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொள்வார் என தகவல்கள் வெளிவந்தன.