• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பால்கன் 9 ராக்கெட்

Byவிஷா

Jun 25, 2025

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷுசுக்லாவுடன் பால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்களில் ஒருவரான இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபன்ஷுசுக்லா, இன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணித்தார்.. மோசமான வானிலை மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பல முறை இந்த திட்டம் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இன்று ஃபால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..
1984 ஆம் ஆண்டு அப்போதைய சோவியத் யூனியனின் சல்யுட்-7 விண்வெளி நிலையத்தின் ஒரு பகுதியாக ராகேஷ் சர்மா 8 நாட்கள் சுற்றுப்பாதையில் பயணித்தார். அதன்பின் 41 ஆண்டுகளுக்குப் பிறகு, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணிக்கும் முதல் விண்வெளி வீரர் என்ற பெருமையை சுபன்ஷு சுக்லா பெற்றுள்ளார்.
ஆக்சியம்-4 பணி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான 4-வட்ஜி தனியார் விண்வெளி வீரர் பயணமாகும். இது புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, பால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..
36 மணி நேரம் பயணித்து நாளை மாலை 4.30 மணிக்கு விண்வெளி மையத்துடன் டாக்கிங் பணி நடைபெறும். 2 வாரம் தங்கியிருந்து 7 விதமான ஆய்வுகளை சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் மேற்கொள்ள உள்ளனர். விண்வெளியில் பயிற்சிகள் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். மேலும் குறைந்த புவி ஈர்ப்பு விசையில் உடலின் தசைகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த பயணத்திற்கு முன்னாள் நாசா விண்வெளி வீராங்கனை பெக்கி விட்சன் தலைமை தாங்குகிறார், தற்போது அவர் ஆக்சியம் ஸ்பேஸில் தளபதியாக பணியாற்றுகிறார். சர்வதேச குழுவில் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி (ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்) மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு ஆகியோர் அடங்குவர், இருவரும் பணி நிபுணர்களாக பணியாற்றுகிறார்கள். குழு கேப்டன் சுக்லா அவர்களுடன் பணியின் பைலட்டாக இணைந்துள்ளார்..
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான ஆக்சியம்-4 பயணத்தின் ஒரு பகுதியாக, சுக்லாவின் பயணம் இந்தியாவின் விண்வெளி ஆய்வு முயற்சிகளில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. இந்தப் பயணம் தனியார் நிதியுதவியுடன் கூடிய வணிக முயற்சியின் ஒரு பகுதியாகும், இந்தியா சர்வதேச விண்வெளி மையத்தில் சுக்லாவின் இடத்தைப் பெற $60 மில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்வதாகக் கூறப்படுகிறது. அவரது பயணம் இந்தியாவின் மனித விண்வெளிப் பயண லட்சியங்களை முன்னேற்றுவது மட்டுமல்லாமல், உலகளாவிய விண்வெளி பணிகளில் இந்தியாவின் முன்னேற்றத்தையும் வலுப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.