மதுரை விமான நிலைய வளாகத்தில் உள்ள கூட்டம் மையத்தில் மதுரை விமான நிலைய பொறுப்பு இயக்குனர் இளம்பரிதி மதுரை விமான நிலைய மத்தியத் தொழில் பாதுகாப்பு உதவி கமாண்டன்ட் கமல்குமார் திமற்றும் பல்வேறு விமான நிறுவன அதிகாரிகள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மேலாளர் ஹரிக்குமார், உதவி மேலாளர் சிவன், காவல் துணை ஆணையர்,மற்றும் சுகாதார துறை அலுவலர்கள், அவசரகால பேரிடர் மீட்பு பணி அலுவலர்கள் ஆகியோர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

வரும் 26.06.25 அன்று மதுரை விமானநிலைய ஒடு பாதையில் விமான விபத்து, மற்றும் தீவிரவாத பாதுகாப்பு குறித்து அனைத்து அலுவலர்கள் ஒருங்கிணைந்து மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நடைபெறும் .

பாதுகாப்பு ஒத்திகையின் மூலம் தீவிரவாத தாக்குதல் விமான விபத்து போன்ற அவசரகாலங்களில் ஏற்படும் பேரிடர்களில் விமான பயணிகளை மீட்கும் பணிகளில் ஒத்திகை பயிற்ச்சி அலுவலர்களுக்கு உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
