
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறு பரப்பும், திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.பி. ராஜா மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையிலான நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.
தொடர்ந்து அய்யனார்குளம் கிராமத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு அய்யனார்குளம் விநாயகர் கோவிலில் வழிபாடு செய்து, அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, கீழடி அகழ்வாராய்ச்சிக்காக முதன்முதலாக 55 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து, அகழ்வாய்வை மேற்கொண்டது அம்மாவின் அரசு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதில் கிடைக்கப்பட்ட அறிய தமிழர் பாரம்பரிய பண்பாட்டை உலகறியச் செய்ய 12.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி.
அதை தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் உலக தமிழ் சங்கத்தில் அதை காட்சிபடுத்தி உலக மக்கள் தெரியும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி தான் கொண்டு வந்தார்.
அதற்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, இப்போதும் சொல்கிறோம் அகழ்வாராய்ச்சி-யின் ஆதாரங்களை மறுப்பார்களே ஆனால் அதற்கான முதல் குரலாக உரிமை குரலை அதிமுக எழுப்புவோம்.
அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு நாடகம் ஆடுவது, இரட்டை வேடம் போடுவது திமுகவிற்கு கை வந்த கலை.
திமுகவின் இயலாமையை மறைப்பதற்கு அகழாய்வை உலகத்திற்கு வெளிப்படுத்திய எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு பரப்புவதை வண்மையாக கண்டிக்கிறோம்.
இந்த திமுக தகவல் தொழில்நுட்ப துறையின் மாநில செயலாளர் டி.ஆர்.பி. ராஜா, இது போன்று இழி செயல்களில் ஈடுபடுவாரே ஆனால் தமிழ்நாட்டிலிருந்து நடமாட முடியாத அளவிற்கு அதிமுக தொண்டர்கள் கொதித்து போய் இருக்கிறார்கள் அவர்கள் எந்த விதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என எங்களால் உறுதியாக சொல்ல முடியாது.
ஏனென்றால் அந்த அளவிற்கு நாங்கள் நேசிக்கும் தலைவரை அவதூறு செய்வது கடுமையான கண்டனத்திற்குரியது.

அவர் இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும், அவர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தான் எங்கள் புகார் மனுவின் சாராம்சம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கான நம்முடைய வரலாறு, இந்த வரலாறு குறித்து அரசு சார்பில் கேட்கப்படுகிற, முன் வைப்படுகிற விவாதங்களை இங்கு முன் வைக்கவில்லை.
அகழ்வாராய்ச்சி நமது தமிழர் பண்பாட்டை யாராலும் மறைக்க முடியாது., தொண்மையையும், நமது நாகரீகத்தையும், கல் தோன்றி முன் தோன்றா மூத்த குடி தமிழ்குடி., ஆகவே மொழியிலும் சரி இனத்திலும் சரி நாம் முன்னோர்கள் மூத்தவர்கள்., பண்பாட்டையும், நாகரீகத்தையும் உலகத்திற்கு கற்றுத் தந்த இனம் தமிழ் இனம் அதற்கு ஆயிரம் ஆயிரம் ஆதாரங்களை நாம் சமர்பித்துக் கொண்டே இருக்கிறோம்., அவர்கள் கேட்பதற்கு நிச்சயமாக ஆதாரம் நம்மிடம் இருக்கிறது., அதை கொடுப்போம் அதை ஏற்றுக் கொள்ள கூடிய காலம் இருக்கிறது.
அதை முன்வைத்து கொண்டு திசை திருப்புகிற வேலையை எப்போதும் போல இப்போதும் திமுக கையாளுகிறார்கள்.
அதில் உட்சபட்சமாக அரசியல் அநாகரீகத்தின் உட்சம், வரம்பு மீறி, மரபு மீறிய செயல் எங்கள் இதயம் வலிக்கின்ற வகையில், எல்லோரும் வலியோடு தான் இந்த புகார் மனுவை கொடுத்துள்ளோம்.
எல்லா பகுதிகளிலும், வழக்கறிஞர் பிரிவு, தகவல் தொழில்நுட்ப பிரிவு, மாவட்ட கழகம் சார்பில் உடனடியாக சட்ட நடவடிக்கைகள் வேண்டும் என்பதை வலிறுத்தும் வகையில் தொடர்ந்து கொடுப்போம் என பேட்டியளித்தார்.
