விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஐயப்பன் கோவில் உள்ளது இக்கோவிலின் அருகில் ஸ்ரீ பூர்ணகலா ஸ்ரீ புஷ்பகலா சமேத ஸ்ரீ பால் அய்யனார் கோவில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

கட்டுமான பணிக்காக நிதி உதவி வழங்க வேண்டுமென அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜியிடம் திருப்பணி குழு கமிட்டியினர் வேண்டுகோள் விடுத்தனர்.
அதனை ஏற்று கோவில் கட்டுமான பணிக்காக ரூபாய் 50,000 முன்னாள் அமைச்சர் கே .டி. ராஜேந்திர பாலாஜி வழங்கினார். நிதி வழங்கியதற்கு திருப்பணி குழு கமிட்டியினர் நன்றி தெரிவித்தனர்.






; ?>)
; ?>)
; ?>)
