• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா..,

ByKalamegam Viswanathan

Jul 27, 2026

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தனியார் மஹாலில் எஸ் பி கருப்பையா ஏ சுப்புராஜ் அம்மாள் ஆசிரியர்கள் நினைவு கல்வி மற்றும் பொதுத் தொண்டு அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினார் முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டது. நாச்சிகுளம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தமிழ் தாய் வாழ்த்து பாடினார்கள். அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சத்தியமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். முனைவர் ராஜலட்சுமி மற்றும் கனரா வங்கி மேலாளர் ஓய்வு பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர்பால் பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கினார். திமுக பேரூர் நிர்வாகி மு பா பிரகாஷ் முன்னாள் வாடிப்பட்டி ஒன்றிய பெருந்தலைவர்கள் ராஜேஷ் கண்ணா வனிதா நாச்சிகுளம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வழக்கறிஞர் தங்கபாண்டி எல்ஐசி டெவலப்மென்ட் ஆபிசர் முருகையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சென்னை குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நவராஜ் நன்றி உரையாற்றினார்.

அறங்காவலர்கள் நிர்வாகஅறங்காவலர் சத்தியமூர்த்தி அறங்காவலர்கள் முத்துலட்சுமி வசந்த சரவணன் மருத்துவர் ரேவதி குருஆனந்த் கார்த்திகேயன் ஜெயரூபா ஆகியோர் நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அனைவருக்கும் அறுசுவையுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாவுடன் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.