• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

தட்டனூர் பொன் மகாமுனியாண்டி கோவில் திருவிழா

ByKalamegam Viswanathan

Jun 11, 2025

மதுரை கீழக்குயில்குடி தட்டனூர் பொன் மகா முனியாண்டி கோவில் திருவிழாவில்
5 ஆயிரம் பேருக்கு அசைவ உணவு விருந்து நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கீழக்குயில் குடி அருகே உள்ளது தட்டானூர். இங்கு பிரசித்தி பெற்ற அருள்மிகு பொன் மகா முனியாண்டி கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.

பக்தர்கள் தங்களை உணர்த்துக் கடனுக்காக கிடாவெட்டி விருந்து வைப்பதாக வேண்டிக் கொள்கிறார். அதனை தொடர்ந்து தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பின் திருவிழா சமயங்களில் கிடா பெட்டி பக்தர்களுக்கு விருந்து வைப்பது வழக்கம்.

இந்நிலையில் நேற்று சுமார் நூற்றுக்கு மேற்பட்ட ஆட்டு கிடாக்கள் பக்தர்களின் நேர்த்தி கடனாக வெட்டப்பட்டு, 5 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மெகா அசைவ உணவு இருந்து நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் தனக்கன் குளம், கீழக்குயில் குடி, விளாச்சேரி, வடிவேல் கரை ,நாகமலை புதுக்கோட்டை மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பேர் வந்து சாமி தரிசனம் செய்து, கறி விருந்தில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பொன் மகா முனிஸ்வரர் கோயில் பூசாரி சீட்டு என்ற கண்ணன் மற்றும் கோயில் கமிட்டி நிர்வாகிகள் செய்தனர்.