• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை..,

ByS. SRIDHAR

Jun 7, 2025

*இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈகை பெருநாள் என்று சொல்லக்கூடிய பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை ஈத்கா பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி ஒன்றிணைந்து தொழுகையில் ஈடுபட்டு அனைவரும் நலமுடன் வாழ வேண்டி துவா செய்து பின்னர் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

மேலும் இதே போல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.