• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்..,

ByKalamegam Viswanathan

Jun 7, 2025

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டார வேளாண்மை கோட்டம் வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது,
விவசாயிகள் தங்கள் நிலங்களில் கோடை உழவு செய்வது மிக அவசியமாகும். கோடைகாலத்தில் விவசாய நிலத்தை தரிசாக வைக்காமல் உழவு செய்திட வேண்டும்.

தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இந்த மழை மண்ணில் சேமிக்கப்படாமல் மேல்மண்னுடன் கலந்து நீரோட்டமாக வெளியேறி வீணாகிறது. கோடை உழவு செய்வதினால் மழை நீர் வீணாகாமல் சேமிக்கப்படுகிறது. மேலும் மண் அரிமானம் தடுக்கப்படுகிறது. கோடை உழவினால் மண்ணில் கட்டமைப்பு மேம்படுவதுடன் பூமிக்குள் இருக்கும் நுண்ணுயிரிகள் பெருகி அவற்றில் செயல்பாடுகள் அதிகரிக்கப்படுகிறது. பயிர்க் கழிவுகள் மற்றும் திறன் அதிகரிப்பதினால் கரிமச்சத்து உயர்ந்து சாகுபடி செய்யும் பயிருக்கு ஊட்டச்சத்து கிடைக்கும்.

இத்துடன் பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளின் எஞ்சிய நச்சுக்களால் நிலம் மற்றும் நீர் வளத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை கோடை உழவு தடுக்கின்றது. கோடை உழவு செய்வதினால் களை விதைகள் அழிக்கப்படும் களைகள் அழிக்கப்படுவதினால் மகசூல் அதிகரிக்கின்றது. பெரும்பாலும் பயிர்களை பாதிக்கும் பூச்சிகள் மண்ணில் முட்டையிட்டு வளரும் கோடை உழவு செய்வதினால் முட்டைகள் வெளிக்கொணந்து சூரிய ஒளியினால் முட்டைகள் மற்றும் புழுக்கள் அளிக்கப்பட்டு பயிரை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது.

நோய் ஏற்படுத்தும் பூஞ்சான்களும் சூரிய ஒளியினால் அழிக்கப்பட்டு நோய் பாதிப்பை குறைக்கிறது. மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானவாரிநிலங்களில் கோடை உழவு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.800 வீதம் மானியமாக வேளாண்மை துறையினர் மூலம் வழங்கப்படுகிறது.அதிகபட்சமாக ஒரு விவசாயி 5 ஏக்கர் வரை பயன் பெறலாம் இத்திட்டத்தில் சிறு குறு ஆதிதிராவிட பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகள் முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறலாம்.

மேலும் தகுதியுடைய விவசாயிகள் உழவர் செயலின் மூலம் பதிவு செய்யும் முன்னுரிமை அடிப்படையில் பயன்படலாம். எனவே கோடைகாலங்களில் கோடை உணவு செய்து பயனடைய வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.