பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு 2025 கல்விதிருவிழா விருதுநகரில் ஜூலை 14ல் நடைபெறும் இலட்சத்தீபம் ஏற்றுதல் மற்றும் சிவகாசியில் நடைபெறும் மாபெரும் கல்விதிருவிழா குறித்து ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. சிவகாசி மாநகர தலைவர் கண்ணன் அவர்கள் தலைமை வகித்தார் . ஆண்டவர் சிறப்புரையாற்றினார்.

சிவகாசி மற்றும் சுற்றியுள்ள நாடார் உறவின் முறை மற்றும் நாடார் மஹாஜன சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கூட்டத்தில் வரும் ஜூலை மாதம் 15ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடுவது பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.